மீன் வாங்க குவிந்த கூட்டம்


மீன் வாங்க குவிந்த கூட்டம்
x
திருப்பூர்


தொழில்நகரமான திருப்பூரில் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை 6 நாட்கள் பின்னலாடை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் அசைவ உணவு விரும்பி சாப்பிடுவதும், பின்னர் ஓய்வு எடுப்பதும் வழக்கம். இதனால் ஞாயிற்றுக்கிழமைகளில் சிக்கன், மட்டன் மற்றும் மீன் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் நிரம்பி காணப்படும்.

குறிப்பாக தென்னம்பாளையம் சந்தையில் ஞாயிற்றுக்கிழமைதோறும் மீன் வாங்க அதிக அளவில் மக்கள் படையெடுப்பார்கள். 2 மாதங்களாக மீன்பிடி தடை காலம் என்பதால் தென்னம்பாளையம் மீன் சந்தைக்கு மீன் வரத்து குறைந்தது. இதனால் மீன் விலை தாறுமாறாக உயர்ந்தது. இதன் காரணமாக பொதுமக்கள் மீன் வாங்க ஆர்வம் காட்டாமல் இருந்தனர். இந்த நிலையில் மீன்பிடி தடை காலம் நீங்கியதை தொடர்ந்து தென்னம்பாளையம் சந்தைக்கு வழக்கம் போல அனைத்து மீன் வகைகளும் அதிக அளவில் வரத்தொடங்கியது. இதனால் கடந்த 2 வாரங்களாக தென்னம்பாளையம் மீன்சந்தைகளை கட்ட தொடங்கி உள்ளது.

இந்த நிலையில் நேற்று விடுமுறை நாள் என்பதால் ஏராளமான மக்கள் தென்னம்பாளையம் மீன் சந்தையில் குவிந்தனர். அவர்கள் வகை, வகையான மீன்களில் தங்களுக்கு பிடித்த மீன்களை ஆர்வமுடன் வாங்கி சென்றனர். இதனால் மீன் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Next Story