திருப்பூரில் மீன்விலை குறைவு
திருப்பூர் தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டில் நேற்று கார்த்திகை மாத தொடக்கத்தை முன்னிட்டு மீன் வரத்து மற்றும் மீன் விலை குறைந்து காணப்பட்டது. குறிப்பாக கிலோ ஒன்றுக்கு விற்பனை செய்யப்பட்ட மீன்களின் விவரம் வருமாறு:- வஞ்சிரம் ரூ.600-க்கும், ஊளி ரூ.200-க்கும், அயிலை ரூ.100-க்கும், மத்தி ரூ.100-க்கும், பாறை ரூ.300-க்கும், முரல் ரூ.250-க்கும், சங்கரா ரூ.200-க்கும், வௌமீன் ரூ.350-க்கும், இறால் ரூ.700-க்கும் மற்றும் நண்டு ரூ.350-க்கும் விற்பனையானது. கடந்த ஞாயிற்றுக்கிழமை 100 டன் மீன் விற்பனைக்கு வந்தநிலையில் தற்போது 20 டன் குறைந்து 80 டன் மட்டுமே விற்பனைக்காக கொண்டுவரப்பட்டது. மேலும் மீன்களின் விலை கிலோவிற்கு குறைந்தபட்சம் ரூ.30 முதல் ரூ.40 வரை குறைந்திருக்கிறதுள என மீன் வியாபாரிகள் தெரிவித்தனர். மீன் விலை குறைவு காரணமாக பொதுமக்கள் அதிகளவில் மீன் வாங்க தென்னம்பாளையம் மார்க்கெட்டிற்கு வருகை தந்தனர்.