லாரி மோதி மீன் வியாபாரி பலி


லாரி மோதி மீன் வியாபாரி பலி
x

மன்னார்குடியில் லாரி மோதி மீன் வியாபாரி உயிரிழந்தார். இது தொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.

திருவாரூர்

மன்னார்குடி

மன்னார்குடி ஜீயர் தோப்பு பகுதியை சேர்ந்தவர் ஜெயபால்(வயது60). மீன் வியாபாரியான இவர் நேற்று காலை வழக்கம் போல சைக்கிளில் மீன் விற்பனை செய்வதற்காக நெடுவாக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தார். தஞ்சை சாலையில் ஜெயபால் வந்த போது அந்த வழியாக வந்த லாரி ஜெயபால் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ஜெயபால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த மன்னார்குடி போலீசார் ஜெயபால் உடலை மீட்டு மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் லாரியை ஒட்டி வந்த கரூரை சேர்ந்த டிரைவர் ரமேஷ் (53) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story