மீனவ பெண்கள் கடற்பாசி வளர்க்க மானியம் பெற விண்ணப்பிக்கலாம்


மீனவ பெண்கள் கடற்பாசி வளர்க்க மானியம் பெற விண்ணப்பிக்கலாம்
x

மீனவ பெண்கள் கடற்பாசி வளர்க்கும் திட்டத்தில் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறி உள்ளார்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

மீனவ பெண்கள் கடற்பாசி வளர்க்கும் திட்டத்தில் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறி உள்ளார்.

கடற்பாசி வளர்க்கும் திட்டம்

தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தஞ்சை மாவட்டத்தில் உள்ள கடலோர மீனவ மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக 2022-2023-ம் ஆண்டுக்கான பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கயிறு முறையில் கடற்பாசி வளர்த்தல் மற்றும் உள்ளீட்டுக்கு மானியம் வழங்குதல் திட்டத்திற்கு தஞ்சை மாவட்டத்திற்கு 100 அலகுகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 1 பயனாளிக்கு 2 அலகு வீதம் 50 பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்கலாம்

இந்த திட்டத்தின்படி ஒரு அலகிற்கு ஆகும் செலவினம் ரூ.8 ஆயிரம். இதில் 60 சதவீதம் மானியமாக ரூ.4,800 பயனாளியின் வங்கி கணக்கிற்கு வழங்கப்படும். எனவே தஞ்சை மாவட்டமான கடற்பாசி வளர்ப்பிற்கு உகந்த பகுதியாக அமைந்துள்ளதால் மீனவ மகளிரின் மாற்று வாழ்வாதாரமாக கடற்பாசி வளர்ப்பு மேற்கொள்ளலாம். இதற்கு விருப்பமுள்ளவர்கள் பட்டுக்கோட்டை தாலுகா மல்லிப்பட்டினத்தில் உள்ள மீன்வளத்துறை ஆய்வாளர் அலுவலகம் மற்றும் பேராவூரணி தாலுகா சேதுபாவாசத்திரத்தில் உள்ள மீன்துறை ஆய்வாளர் அலுவலகங்களை நேரடியாக தொடர்பு கொண்டு விண்ணப்பம் பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story