தொண்டி கடலில் மூழ்கி மீனவர் சாவு


தொண்டி கடலில் மூழ்கி மீனவர் சாவு
x

தொண்டி கடலில் மூழ்கி மீனவர் பரிதாபமாக இறந்தார்.

ராமநாதபுரம்

தொண்டி,

தொண்டி அருகே உள்ள முள்ளி முனை கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் மாயகிருஷ்ணன் (வயது 55), நாயக்கர் (56),இடிமலை (50) ஐயப்பன் (42) இளையராஜா (33) ஆகியோர் ஒரு நாட்டுப் படகில் நண்டு பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். 3 கடல் மைல் தூரத்தில் படகை நிறுத்திவிட்டு கடலில் குதித்து வலையில்லாமல் கடலுக்குள் மூழ்கி நண்டு பிடித்துள்ளனர். அப்போது மாயகிருஷ்ணன் மாயமானார். அவரை மற்ற மீனவர்கள் தேடி உள்ளனர். இந்த நிலையில் நேற்று கடலில் மாயகிருஷ்ணனின் உடல் மிதந்தது.


Related Tags :
Next Story