மனைவி இறந்த துக்கத்தில் மீனவர் தூக்குப்போட்டு தற்கொலை


மனைவி இறந்த துக்கத்தில் மீனவர் தூக்குப்போட்டு தற்கொலை
x

வெள்ளிச்சந்தை அருகே மனைவி இறந்த துக்கத்தில் மீனவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி

ராஜாக்கமங்கலம்:

வெள்ளிச்சந்தை அருகே மனைவி இறந்த துக்கத்தில் மீனவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மீனவர்

வெள்ளிச்சந்தை அருகே உள்ள முட்டம் ஐஸ் பிளாண்டு தெருவை சேர்ந்தவர் பனிப்பிச்சை (வயது 65), மீனவர். இவருக்கு அமலசாந்தி என்ற மனைவியும், 2 மகள்களும் உண்டு. மகள்கள் இருவருக்கும் திருமணமாகி விட்டது. இதனால், பனிப்பிச்சை மனைவியுடன் வசித்து வந்தார்.

இந்தநிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பனிப்பிச்சையின் மனைவி அமலசாந்தி திடீரென இறந்து விட்டார். இதையடுத்து அவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக பனிப்பிச்சை மனைவி இறந்ததால் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார். மேலும், யாரிடமும் சரியாக பேசாமல் அமைதியாக இருந்து வந்தார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறி வந்தனர்.

தூக்கில் தொங்கினார்

இந்தநிலையில் நேற்று முன்தினம் பனிப்பிச்சை வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கு பனிப்பிச்சை தூக்கில் பிணமாக தொங்கினார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்தவர்கள் உடனே வெள்ளிச்சந்தை போலீசுக்கு தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பனிப்பிச்சையின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், மனைவி இறந்த துக்கத்தில் பனிச்பிச்சை தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து பனிப்பிச்சையின் மகள் ஸ்டெபின் சாந்தினி (36) வெள்ளிச்சந்தை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மனைவி இறந்த துக்கத்தில் மீனவர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் ேசாகத்தை ஏற்படுத்தியது.


Next Story