திருச்செந்தூர் அருகே விபத்தில் மீனவர் பலி


திருச்செந்தூர் அருகே விபத்தில் மீனவர் பலி
x
தினத்தந்தி 14 Sept 2023 12:15 AM IST (Updated: 14 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் அருகே விபத்தில் மீனவர் பலியானார்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் அமலிநகரை சேர்ந்தவர் தியாகு மகன் ராஜா (வயது 36). மீனவர். இவர் நேற்று முன்தினம் இரவு ஆலந்தலைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். திருச்செந்தூர்- குலசேகரன்பட்டினம் ரோட்டில் உள்ள முனியசாமி கோவில் பகுதியில் சென்றபோது, எதிரே வந்த வேன் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த திருச்செந்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சோனியா சம்பவ இடத்திற்கு சென்று ராஜாவின் உடலை கைப்பற்றி திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் சம்பவம் குறித்து அவரது மனைவி சோனியா கொடுத்த புகாரின் பேரில் திருச்ெசந்தூர் போலீசார், வேன் டிரைவரான விருதுநகர் மீனாட்சிபுரம் அம்பிராஜாவை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story