மீனவர், காத்தாடி கருவி வெட்டி படுகாயம்


மீனவர், காத்தாடி கருவி வெட்டி படுகாயம்
x

மீனவர், காத்தாடி கருவி வெட்டி படுகாயம்

நாகப்பட்டினம்

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை தென்கிழக்கே காரைக்கால் பகுதியை சேர்ந்த வினோபா என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 15 மீனவர்கள் நேற்றுமுன்தினம் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அப்போது கோடியக்கரை தென்கிழக்கே மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது படகில் இருந்த மீனவர் குகன் (வயது 30) என்பவர் படகு என்ஜினில் சிக்கிய வலையை எடுக்க முயன்றார். அப்போது படகில் பொருத்தப்பட்ட காத்தாடி கருவி குகன் காலில் வெட்டியது. இதில் படுகாயமடைந்த அவரை படகில் இருந்த மீனவர்கள் மீட்டு உடனடியாக கோடியக்கரை கடற்கரைக்கு படகு மூலம் கொண்டு வந்தனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் குகனை வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசாருக்கும், மீன்துறை அலுவலர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.


Next Story