கடலில் விழுந்த மீனவர் மாயம்
நாகையில் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது படகில் இருந்து தவறி விழுந்து மீனவர் மாயமானார். அவரை தேடும் பணியில் சக மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
நாகையில் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது படகில் இருந்து தவறி விழுந்து மீனவர் மாயமானார். அவரை தேடும் பணியில் சக மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கடல் சீற்றம்
நாகை நம்பியார் நகரை சேர்ந்தவர் அஞ்சப்பன் (வயது 58). அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது விசைப்படகில் அஞ்சப்பன் உள்ளிட்ட 11 மீனவர்கள் நேற்று முன்தினம் நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அப்போது நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருக்கும்போது காற்று பலமாக வீசியதால் கடல் சீற்றம் காரணமாக விசைப்படகின் பக்கவாட்டில் நின்ற அஞ்சப்பன் கடலில் விழுந்தார்.
தேடும் பணி
இதையடுத்து படகில் இருந்த சக மீனவர்கள், அஞ்சப்பனை தேடிப்பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. கடல் சீற்றம் அதிகமாக இருப்பதால் அஞ்சப்பனை தேடும் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இருந்தும் அஞ்சப்பனை தேடும் பணிகளில் நாகை நம்பியார் நகர் மீனவர்கள் மும்பரமாக ஈடுபட்டு வருகின்றனர்.