தூத்துக்குடியில்மீனவரின் மோட்டார் சைக்கிள் எரிப்பு
தூத்துக்குடியில்மீனவரின் மோட்டார் சைக்கிள் எரிக்கப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும் இரண்டு பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
தூத்துக்குடியில் மீனவரின் மோட்டார் சைக்கிள் எரித்தவர் கைது செய்யப்பட்டார். மேலும் 2 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
மீனவர்
தூத்துக்குடி அன்னை தெரசா நகரை சேர்ந்தவர் மரியமிக்கேல். இவருடைய மகன் மரியதாஸ் (வயது 39). மீனவர். இவர் நேற்று முன்தினம் வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தாராம். அப்போது திடீரென அவரது மோட்டார் சைக்கிள் தீப்பற்றி எரிந்தது. உடனடியாக மரியதாஸ் வெளியில் வந்து பார்த்த போது, அதே பகுதியை சேர்ந்த லூர்துஜெகன் (28), லூர்தம்மாள்புரத்தை சேர்ந்த காளீசுவரன் என்ற கூணன், வெள்ளையன் என்ற முனியசாமி ஆகியோர் மோட்டார் சைக்கிளுக்கு தீவைத்து எரித்து விட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது.
கைது
கடந்த சில நாட்களுக்கு முன்பு காளீசுவரன், வெள்ளையன் என்ற முனியசாமி ஆகியோர் குடியிருந்த பகுதியில் மரியதாஸ் வசித்து வந்தாராம். அப்போது அவர்களுக்கு இடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக மோட்டார் சைக்கிளை தீவைத்து எரித்து இருப்பது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து லூர்துஜெகனை கைது செய்தனர். மற்ற 2 பேரையும் தேடி வருகின்றனர்.