6-வது நாளாக மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை
வேதாரண்யத்தில் கடல் சீற்றம் காரணமாக 6-வது நாளாக மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தில் கடல் சீற்றம் காரணமாக 6-வது நாளாக மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை.
கடல் சீற்றம்
நாகை மாவட்டத்தில் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், நம்பியார்நகர், வேதாரண்யம், ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், கோடியக்கரை உள்பட பல மீனவ கிராமங்கள் உள்ளன.வங்க கடலில் சித்ராங் புயல் கரை கடந்தநிலையில் ேநற்றும் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் கடல் கடும் சீற்றமாக காணப்பட்டது. கடல் சீற்றத்தால் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளை தண்ணீர் சூழ்ந்தது. இதனால் மீனவர்கள் படகுகளை கடற்கரை சற்று தொலைவில் மேடான பகுதிகளில் நிறுத்தி வைத்துள்ளனர்.
மீன்பிடிக்க செல்லவில்லை
கடற்கரை ஓரத்தில் மீன்பிடி வலைகள் அடுக்கப்பட்டுள்ள நிலையில் தண்ணீர் சூழ்ந்ததால் மீன்பிடி வலைகளையும் வாகனம் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு மீனவர்கள் கொண்டு சென்றனர் புயல் கரை கடந்த நிலையில் கோடியக்கரை, ஆறுகாட்டுதுறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், மணியன்தீவு உள்ளிட்ட மீனவ கிராமங்களில் 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் மீனவர்களின் படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. தொடர்ந்து 6 நாட்கள் மீன்பிடிக்க செல்லாததால் வருமான இழப்பை சந்தித்து உள்ளதாக மீனவர்கள் கூறினர். தற்போது மீனவர்கள் வலைகளை பழுதுநீக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.