4-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
அதிராம்பட்டினத்தில் பெய்த தொடர்மழை காரணமாக 4-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
அதிராம்பட்டினம்;
அதிராம்பட்டினத்தில் பெய்த தொடர்மழை காரணமாக 4-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
மீன்பிடி
தஞ்சை மாவட்டம்அதிராம்பட்டினம் கடற்பகுதியில் தம்பிக்கோட்டை மறவக்காடு, கரையூர் தெரு, காந்தி நகர், ஆறுமுக கிட்டங்கி தெரு, தரகர் தெரு, கடற்கரைத்தெரு, ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம் உள்ளிட்ட மீனவ கிராமங்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நாட்டு படகு மூலம் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். அதிராம்பட்டினம் கடற்பகுதியில் கடந்த சில நாட்களாக சூறைக் காற்று வீசி வருகிறது. மேலும் மழையும் பெய்து வருகிறது.
சூறைக்காற்று
இந்த மழை கரை பகுதியை விட கடல் பகுதியில் அதிக அளவில் பெய்து வருகிறது. இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் இருந்து வந்தனர். நேற்று நான்காவது நாளாக மழை பெய்ததது. அப்போது மீனவர்கள் கடற்பகுதிக்கு சென்று பார்த்தனர். அப்போது கடலில் கடுமையாக காற்று வீசியது. பின்னர் நேரம் செல்ல செல்ல அதிவேக சூறைக்காற்றாக மாறி படகு கவிழும் நிலை ஏற்பட்டது.இதனால் அச்சமடைந்த அந்த மீனவர்கள் உடனடியாக படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி விட்டு வீடு திரும்பினர்.