பைபர் படகுகளில் மீன்வளத்துறையினர் ஆய்வு
வேதாரண்யம் பகுதியில் பைபர் படகுகளில் மீன்வளத்துறையினர் ஆய்வு செய்தனர்.
நாகப்பட்டினம்
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த கோடிக்கரை துறைமுகத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மீன்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்த படகுகளில் பொருத்தப்பட்டுள்ள என்ஜின் யார் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த படகிற்கு வாக்கி டாக்கி மற்றும் டீசல் மானியம் பெறப்படுகிறதா? என்பது குறித்து தஞ்சை மீன்வளத்துறை ஆய்வாளர் கெங்கேஸ்வரி தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.இதேபோல் ஆறுகாட்டுதுறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், மணியன்தீவு, வானவன்மகாதேவி உள்ளிட்ட 11 மீனவ கிராமங்களிலும் உள்ள 1500 பைபர் படகுகளை மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
Related Tags :
Next Story