மீன்பிடிக்க செல்ல தயாராகும் மீனவர்கள்
மாண்டஸ் புயல் கரையை கடந்ததால் மீன்பிடிக்க செல்ல மீனவர்கள் தயாராகி வருகின்றனர்.
வேதாரண்யம்:
வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லக்கூடாது என மீன்வளத்துறை அறிவித்திருந்தது. இதனால் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை, ஆறுகாட்டுதுறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், வனவன் மாகதேவி உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடந்த 4-ந்தேதி முதல் மீன்பிடிக்க செல்லாமல் வீடுகளில் முடங்கி கிடந்தனர். மேலும் தங்களது படகுகளை கடற்கரையில் இருந்து வெகு தூரம் கொண்டு சென்று பாதுகாப்பாக நிறுத்தி வைத்திருந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு புயல் கரை கடந்ததால் மீன்பிடிக்க செல்ல மீனவர்கள் தயாராகி வருகின்றனர். கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளில் உள்ள தண்ணீரை இறைக்கும் பணியிலும், வலைகளை சீர் செய்யும் பணியிலும் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மீனவத்துறை அறிவிப்பு வந்தவுடன் இன்று(ஞாயிற்றுக்கிழமை) அல்லது நாளை(திங்கட்கிழமை) மீன்பிடிக்க செல்ல தயாராகி வருவதாக மீனவர்கள் தெரிவித்தனர்..