சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீனவர்கள் மீன்பிடிக்க கூடாது


சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீனவர்கள் மீன்பிடிக்க கூடாது
x

சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீனவர்கள் மீன்பிடிக்க கூடாது என்று ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

மயிலாடுதுறை

சீர்காழி

61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் முடிந்ததால் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் சுருக்குமடி வலை, இரட்டைமடி வலை, அதிக குதிரை திறன் கொண்ட என்ஜின்களை பயன்படுத்த கூடாது என அரசு தடை விதித்துள்ளது. இதற்கு மீனவர்களில் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக சீர்காழி உதவி கலெக்டர் அலுவலக வளாகத்தில் மீனவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு உதவி கலெக்டர் அர்ச்சனா தலைமை தாங்கினார். மீன்வளத்துறை உதவி இயக்குனர் சண்முகம், தாசில்தார் செந்தில்குமார், சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தடை

கூட்டத்தில், அரசு விதித்துள்ள தடையின் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக சுருக்கு மடிவலையை பயன்படுத்த முடியாததால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்று மீனவர்கள் தரப்பில் எடுத்து கூறப்பட்டது. அரசு தடை செய்துள்ள சுருக்கு மடி வலை, இரட்டை மடிவலை, அதிக குதிரை திறன் கொண்ட என்ஜின்களை பயன்படுத்தி மீன்பிடிக்க கூடாது என்று கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. இதில் கடலோர காவல்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி வெர்ஜீனியா, பூம்புகார் இன்ஸ்பெக்டர் நாகரத்தினம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






Next Story