மேல்மிடாலம் கடற்கரை கிராமத்தில் 2-வது நாளாக மீனவர்கள் போராட்டம்


மேல்மிடாலம் கடற்கரை கிராமத்தில் 2-வது நாளாக மீனவர்கள் போராட்டம்
x

மேல்மிடாலம் கடற்கரை கிராமத்தில் 2-வது நாளாக மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி

கருங்கல்,

மேல்மிடாலம் கடற்கரை கிராமத்தில் 2-வது நாளாக மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம்

கருங்கல் அருகே மேல்மிடாலம் கடற்கரை கிராமத்தில் மீன் இறங்குதளம் அமைக்கும் பணி கடந்த வருடம் மார்ச் மாதம் 14-ந் தேதி முதல் நடைபெற்று வந்தது. இந்த பணிகள் தீவிரமாக நடந்து வந்த நிலையில் திடீரென பாதியில் நிறுத்தப்பட்டது. இதற்கிடையே பணியில் ஈடுபடுத்தப்பட்டு வந்த வாகனங்களை ஒப்பந்ததாரர் எடுத்துச் செல்ல முயன்றார். இதனால் வாகனங்களை சிறைபிடித்த மீனவர்கள் அருட்பணியாளர் பிலிப் ஹென்றி தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று 2-வது நாளாக மீண்டும் வாகனங்களை எடுத்துச் செல்ல முயன்றனர். உடனே மீனவர்கள் திரண்டு எதிர்ப்பு தெரிவித்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் கருங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் இசக்கி துரை, கிள்ளியூர் தாசில்தார் அனிதா, மீன்வளத்துறை ஓவர்சியர் ஜிவின், பொதுப்பணித்துறையை சேர்ந்த குமார் ஆகியோர் போராட்டக்காரர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு எட்டப்பட்டதை தொடர்ந்து வாகனங்கள் விடுவிக்கப்பட்டன.


Next Story