மேல்மிடாலம் கடற்கரை கிராமத்தில் வாகனங்களை சிறைபிடித்த மீனவர்கள்


மேல்மிடாலம் கடற்கரை கிராமத்தில் வாகனங்களை சிறைபிடித்த மீனவர்கள்
x

மேல்மிடாலம் கடற்கரை கிராமத்தில் வாகனங்களை மீனவர்கள் சிறைபிடித்தனர்.

கன்னியாகுமரி

கருங்கல்,

மேல்மிடாலம் கடற்கரை கிராமத்தில் வாகனங்களை மீனவர்கள் சிறைபிடித்தனர்.

சிறைபிடிப்பு

கருங்கல் அருகே மேல்மிடாலம் கடற்கரை கிராமத்தில் மீன் இறங்கு தளம் அமைக்கும் பணி கடந்த வருடம் மார்ச் மாதம் 14-ந் தேதி நடைபெற்று வந்தது. இந்த பணி மும்முரமாக நடந்த நிலையில் திடீரென பாதியில் நிறுத்தப்பட்டது.

அதாவது கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்திடம் இருந்து அனுமதி பெற வேண்டும், கற்கள் பற்றாக்குறை உள்ளது எனக் கூறி கடந்த சில மாதங்களாக பணிகள் நடைபெறாமல் இருந்தது. இதனை கண்டித்து கடந்த மாதம் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது.

பின்னர் பொதுப்பணித்துறை அதிகாரிகள், கருங்கல் இன்ஸ்பெக்டர், ஊர் நிர்வாகிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது மே மாதம் இறுதிக்குள் வேலையை முடித்து விடுவோம் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.

ஆனால் அதன் பிறகும் பணி தொடங்கவில்லை. இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை எடுத்துச் செல்ல முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதனை கண்டித்து மீனவர்கள் அந்த வாகனங்களை சிறைபிடித்தனர். பணியை முடிக்காமல் வாகனங்களை எடுத்துச் செல்லக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story