சின்னமுட்டத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள்


சின்னமுட்டத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள்
x

மீன் வளத்துறையின் கட்டுப்பாட்டை மீறி சின்ன முட்டத்தில் இருந்து ஆழ்கடலுக்கு 300 விசைப்படகுகளில் மீன் பிடிக்க சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி


மீன் வளத்துறையின் கட்டுப்பாட்டை மீறி சின்ன முட்டத்தில் இருந்து ஆழ்கடலுக்கு 300 விசைப்படகுகளில் மீன் பிடிக்க சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

மீனவர்கள்

கன்னியாகுமரியில் உள்ள சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் மழை மற்றும் புயல்காற்று வீச கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. அதைத்தொடர்ந்து மீன்வளத்துறை அறிவிப்பின்படி கடந்த சில நாட்களாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. மேலும் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.

300 படகுகள் சென்றன

இந்தநிலையில் நேற்று முன்தினம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடிவு செய்தனர். இதுதொடர்பாக மீன்வளத்துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் மீனவர்கள் மீன்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய போது 9-ந் தேதி முதல் (அதாவது இன்று) ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்வோம் என மீனவர்கள் உறுதியாக தெரிவித்தபடி அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்தநிலையில் நேற்று அதிகாலையில் சின்னமுட்டம் துறைமுகத்தில் இருந்து 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் தடையை மீறி மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

அனைத்து விசைப்படகுகளும் மீன்பிடிக்க சென்றதால் சின்னமுட்டம் துறைமுகம் படகுகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.


Next Story