மீன்பிடிப்பு சார்ந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு


மீன்பிடிப்பு சார்ந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு
x
தினத்தந்தி 26 Dec 2022 12:30 AM IST (Updated: 26 Dec 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

மீன்பிடிப்பு சார்ந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை

மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாததால் மீன்பிடி தொழில் சார்ந்த பிற தொழில்களை மேற்கொண்டு வரும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலை இழந்துள்ளனர். கொடியம்பாளையம், மடவாமேடு, சின்ன கொட்டாய் மேடு, ஓலகொட்டாய்மேடு, திருமுல்லைவாசல் உள்ளிட்ட கிராம பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இவர்கள் தங்களுடைய படகுகளை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.இது குறித்து மீனவர்கள் கூறுகையில், 'கடல் சீற்றம் காரணமாக கடந்த 6 நாட்களாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. கடல் காற்று பலமாக வீசுகிறது. இதனால் விசைப்படகுகளை பழையாறு துறைமுகத்தில் நிறுத்தி வைத்துள்ளோம். இயற்கை சீற்றத்தால் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது' என்றனர்.


Next Story