படகை கடலுக்குள் செலுத்த முடியாமல் மீனவர்கள் அவதி


படகை கடலுக்குள் செலுத்த முடியாமல் மீனவர்கள் அவதி
x

துறைமுக வாய்க்கால்களை தூர் வாராததால் படகை கடலுக்குள் செலுத்த முடியாமல் மீனவர்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

தஞ்சாவூர்

அதிராம்பட்டினம்;

துறைமுக வாய்க்கால்களை தூர் வாராததால் படகை கடலுக்குள் செலுத்த முடியாமல் மீனவர்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

மீன்பிடி தொழில்

தஞ்சை மாவட்டம் கடற்பகுதியான அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை, கரையூர் தெரு, காந்திநகர், மறவக்காடு, ஆறுமுக கிட்டங்கி தெரு, தரகர் தெரு, கீழத்தோட்டம் ஆகிய பகுதியிலிருந்து 3ஆயிரத்துக்கும்மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்கின்றனர். அதிகாலையில் மீன்பிடி தொழிலுக்கு கடலுக்கு செல்லும் போதுதுறைமுக வாய்க்காலில் தண்ணீர் இல்லாமல் படகுகள் தரை தட்டி நின்றன. இந்த வாய்க்காலில் எந்த நேரமும் 5 அடிக்கு குறையாமல் தண்ணீர் இருக்கும்.

சேற்றில் சிக்கிய படகுகள்

ஆனால் சில சமயங்களில் வாய்க்காலில் தண்ணீர் இல்லாததை கண்டு கவலை அடையும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடி தொழிலுக்கு செல்லாமல் வீடு திரும்புகின்றனர். துறைமுக வாய்க்காலில் தண்ணீர் இல்லாததால் படகை கடலுக்குள் செலுத்த முடியாமல் மீனவர்கள் தவிர்த்து வருவது வாடிக்கையாக உள்ளது.இப்பகுதியில் உள்ள மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல துறைமுக பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த படகுகளை எடுத்து செல்ல துறைமுக வாய்க்காலுக்கு செல்வர். அப்போது அடிக்கடி கடலில் ஏற்படும் சீற்றங்களால் கடலின் தரைப்பகுதியில் உள்ள சேறு அனைத்தும் துறைமுக வாய்க்காலில் வந்து விடுவதால் மீனவர்கள் தங்களது படகுகளை எடுக்க வாய்க்காலில் இறங்கும்போது முழங்கால் அளவுக்கு சேறு இருப்பதால் நடக்க முடியாமலும் படகுகள் சேற்றில் சிக்கி எடுத்து செல்ல முடியாமலும் சிரமப்படுகிறாா்கள்.

மீனவர்கள் தவிப்பு

இதைப்போல நடக்காமல் இருக்க கடற்கரை பகுதியில் இருந்து 300 மீட்டர் வரை சேறு படர்ந்து உள்ளதால் படகுகளை கரைக்கு கொண்டு வந்து சேர்க்க முடியாமல் வாய்க்கால் வழியாக மீனவர்கள் செல்கின்றனர். ஆனால் வாய்க்காலும் தூர் வாராததால் மீனவர்கள் படகுகளை துறைமுகத்துக்கு கொண்டு செல்ல முடியாமலும் கடலுக்கு செல்ல முடியாமலும் தவித்து வருகின்றனர்.இதுகுறித்து காந்திநகர் பகுதியை சேர்ந்த மீனவர்கள் கூறியதாவது:-சாதாரணமாக எங்கள் துறைமுக வாய்க்கால் நீண்ட வருடங்களாக தூர்வாரப்படாமல் இருந்து வருகிறது. இதனால் சேறு நிறைந்து படகை கடலுக்குள் இழுத்து செல்ல சிரமப்பட்டு வந்தோம். சமீபகாலமாக தொடர்ந்து கடலில் சீற்றம் ஏற்பட்டு வருவதால் கடலில் உள்ள சேறு அனைத்தும் துறைமுக வாய்க்காலில் வந்து தேங்கி விடுகிறது.எனவே எங்களின் நிலை கருதி அரசு உடனடியாக துறைமுக வாய்க்கால்களை தூர்வார வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினா்.


Next Story