மீன்பிடி திருவிழா


மீன்பிடி திருவிழா
x

மீன்பிடி திருவிழா நடைபெற்றது.

சிவகங்கை

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி அருகே சிவபுரிபட்டியில் உள்ள சம்பு ஊருணியில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி சிவபுரிபட்டி, பிரான்மலை, வையாபுரிபட்டி, மட்டிக்கரைப்பட்டி, குமரத்துகுடிப்பட்டி, மணப்பட்டி, காளாப்பூர், எஸ்.வி.மங்களம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் ஊருணி முன்பு குவிந்தனர்.

பின்னர்் ஊருணியில் இறங்கி போட்டி போட்டு மீன்களை பிடித்து மகிழ்ந்தனர். இதில் கெளுத்தி, கெண்டை பொடி, ஜிலேபி, விரால் உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் கிடைத்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.



Next Story