மீன்பிடி திருவிழா
மீன்பிடி திருவிழா நடந்தது.
மணப்பாறை:
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த சமுத்திரம் பகுதியில் பெரியகுளம் உள்ளது. அப்பகுதி மக்கள் மற்றும் சுற்று வட்டார பகுதி மக்களின் பிரதான நீராதாரமாக விளங்கும் இக்குளத்தில் சுமார் 15 ஆண்டுகளுக்கு பின் நேற்று மீன்பிடி திருவிழா நடைபெற்றது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த மழையின்போது குளத்தில் நீர் முழுவதுமாக நிறைந்திருந்த நிலையில், அதிக அளவில் மீன்களும் துள்ளி விளையாடின.
இந்நிலையில் தற்போது நீரின் அளவு குறைந்து விட்டதால் கிராம மக்கள் சார்பில் மீன்களை பிடித்துக் கொள்ளும் வகையில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதில் ஊர் முக்கியஸ்தர்கள் தொடங்கி வைத்ததையடுத்து, ஏராளமான மக்கள் போட்டி போட்டு குளத்தில் இறங்கி மீன் பிடிக்கத் தொடங்கினர். இதில் கெண்டை, கெளுத்தி, கட்லா, ஜிலேபி என பல்வேறு வகை மீன்கள் சிக்கியது. சுமார் 2 முதல் 10 கிலோ வரையிலான பெரிய மீன்கள் சிக்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.