மானாமதுரை அருகே களைகட்டிய மீன்பிடி திருவிழா-போட்டி போட்டு மீன்களை அள்ளிய கிராம மக்கள்


மானாமதுரை அருகே களைகட்டிய மீன்பிடி திருவிழா-போட்டி போட்டு மீன்களை அள்ளிய கிராம மக்கள்
x
தினத்தந்தி 24 Jan 2023 12:15 AM IST (Updated: 24 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மானாமதுரை அருகே நடந்த மீன்பிடித்திருவிழா களை கட்டியது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு மீன்களை பாேட்டி போட்டிக்கொண்டு அள்ளினர்.

சிவகங்கை

மானாமதுரை,

மானாமதுரை அருகே நடந்த மீன்பிடித்திருவிழா களை கட்டியது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு மீன்களை ேபாட்டி போட்டிக்கொண்டு அள்ளினர்.

மீன்பிடித்திருவிழா

மானாமதுரை அருகே உள்ள சந்திரனேந்தல் கிராமத்தில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட கண்மாய் உள்ளது. மாவட்டத்தில் விவசாய பணிகள் முடிந்த பின்னா் மீன்பிடித்திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இப்பகுதியில் ெநற்பயிர்கள் அனைத்தும் அறுவடை செய்துவிட்ட நிலையில் கிராம மக்கள் 3 ஆண்டுகளுக்கு பிறகு கண்மாயில் மீன்பிடித்திருவிழாவை நடத்தினர்.

மீன்பிடித்திருவிழாவை கிராம முக்கியஸ்தர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தனா். பின்னா் தயாராக இருந்த கிராம மக்கள் ஒரே நேரத்தில் கண்மாய்க்குள் இறங்கி மீன்களை பிடிக்க தொடங்கினா்.

போட்டிபோட்டு மீன்களை பிடித்தனா்

கிராம மக்கள் வலை போன்ற மீன்பிடிக்க தேவையான உபகரணங்களை கொண்டு மீன்பிடித்தனா். அவர்களின் வலையில் சிறிய அளவிலான மீன்கள் முதல் 2 கிலோ வரை எடை கொண்ட கெண்டை, கட்லா, உளுவை, விரால் போன்ற மீன்கள் கிடைத்தன.

3 ஆண்டுகள் பிறகு களைகட்டிய இந்த மீன்பிடித்திருவிழாவில் போட்டி போட்டு கொண்டு கிராம மக்கள் மீன் பிடித்தனா். மீன்பிடித் திருவிழாவால் இப்பகுதியில் உள்ள வீடுகளில் மீன் குழம்பு வாசனை கமகமத்தது.


Next Story