திருப்பத்தூர் அருகே மீன்பிடி திருவிழாவில் போட்டி போட்டு மீன்களை பிடித்த கிராம மக்கள்


திருப்பத்தூர் அருகே மீன்பிடி திருவிழாவில் போட்டி போட்டு மீன்களை பிடித்த கிராம மக்கள்
x
தினத்தந்தி 30 March 2023 12:15 AM IST (Updated: 30 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் அருகே கண்மாயில் 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்ற பாரம்பரிய மீன்பிடி திருவிழா நடைபெற்றது.

சிவகங்கை

சிவகங்கை,

திருப்பத்தூர் அருகே கண்மாயில் 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்ற பாரம்பரிய மீன்பிடி திருவிழா நடைபெற்றது.

மீன்பிடித் திருவிழா

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பூலாங்குறிச்சி கிராமத்தில் உள்ள சுண்டக்கான் கண்மாயில் விவசாய தேவைக்கு தண்ணீர் பயன்படுத்தியதால் நீர் குறைந்தது. இதனால் கிராமத்தினர் கண்மாயில் உள்ள மீன்களை பிடிக்க முடிவு செய்து சுற்றுப்புற கிராமங்களுக்கு அறிவிப்பு செய்தனர். இதனை தொடர்ந்து நேற்று அதிகாலை முதலே 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து வருகை தந்த இளைஞர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என குடும்பத்துடன் வந்திருந்து கண்மாய் கரையில் அறிவிப்பிற்காக காத்திருந்தனர்.

பலவகை மீன்கள்

மீன்பிடிக்க அனுமதி கிடைத்தவுடன் கிராமமக்கள் தாங்கள்தயாராக வைத்திருந்த ஊத்தா, கச்சா, கொசுவலை, அரிவலை ஆகியவற்றை கொண்டு கண்மாயில் இறங்கி போட்டி போட்டு மீன்களை பிடித்தனர். இந்த பாரம்பரிய மீன்பிடி திருவிழாவில் பல்வேறு கிராமங்களில் இருந்து வருகை தந்த மக்கள் விரால், கட்லா, கெண்டை போன்ற மீன்களை பிடித்தனர். பின்னர் அந்த மீன்களை வீட்டிற்கு கொண்டு சென்று சமைத்து சாமிக்கு படையலிட்டு சாப்பிட்டனர்.


Next Story