மீன்பிடி திருவிழா


மீன்பிடி திருவிழா
x
தினத்தந்தி 3 April 2023 12:15 AM IST (Updated: 3 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

சிங்கம்புணரி அருகே சிவபுரிபட்டி ஊராட்சியில் குமரத்தங்குடிபட்டி கோவில் கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.

சிவகங்கை

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி அருகே சிவபுரிபட்டி ஊராட்சியில் குமரத்தங்குடிபட்டி கோவில் கண்மாய் 40 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ளது. 100-க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் இந்த கண்மாய் நீரை பயன்படுத்தி விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்பகுதியில் விவசாய பணிகள் முடிவுற்று அறுவடைகள் நடைபெற்ற நிலையில் கண்மாயில் உள்ள தண்ணீர் வற்றியது. இதையடுத்து கிராமத்தார்கள் ஒன்றிணைந்து கண்மாயில் மீன்பிடி திருவிழா நடத்த முடிவு செய்தனர். அதன்படி கிராம முக்கியஸ்தர்கள் கண்மாய் கரையில் நின்று பச்சைக் கொடி காட்டினர். அப்போது கண்மாய் கரையை சுற்றி நின்ற 500-க்கும் மேற்பட்ட மீன்பிடியாளர்கள் கண்மாய்க்குள் இறங்கி போட்டி, போட்டு மீன்களை பிடித்தனர்.

இதில், குமரத்தங்குடிபட்டி, சிங்கம்புணரி, சிவபுரிபட்டி, வேங்கைபட்டி, தேனம்மாள்பட்டி, வையாபுரிபட்டி, ஆலம்பட்டி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு கட்லா, லோகு, சிசி, ஜிலேபி, கெளுத்தி, அயிரை உள்ளிட்ட பல வகை மீன்களை அள்ளினர். அதிக அளவில் ஜிலேபி மீன்கள் மட்டுமே சிக்கியது. சில பேர் வலைகளில் பாம்புகளும் சிக்கின. பிடிபட்ட மீன்களை தங்கள் வீடுகளுக்கு கொண்டு சென்று சமைத்து சாப்பிட்டனர்.


Next Story