சாணார்பட்டி அருகே களைகட்டிய மீன்பிடி திருவிழா


சாணார்பட்டி அருகே களைகட்டிய மீன்பிடி திருவிழா
x
தினத்தந்தி 10 April 2023 2:15 AM IST (Updated: 10 April 2023 2:15 AM IST)
t-max-icont-min-icon

சாணார்பட்டி அருகே மீன்பிடி திருவிழா களைகட்டியது.

திண்டுக்கல்

சாணார்பட்டி அருகே திண்டுக்கல்-நத்தம் சாலையில் கன்னியாபுரம் உள்ளது. இங்குள்ள பெருமாள்குளத்தில் மீன்பிடி திருவிழா நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனர். அதன்படி, நேற்று மதியம் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. அப்போது கிராம இளைஞர்கள், பொதுமக்கள் மற்றும் நத்தம், கொட்டாம்பட்டி, சிங்கம்புணரி, செங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் குளத்தில் இறங்கி போட்டிப்போட்டு மீன்களை பிடித்தனர்.

ஊத்தா எனப்படும் மூங்கில் கூடை, சிறிய வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்தனர். களைகட்டிய இந்த மீன்பிடி திருவிழாவில், விரால், ஜிலேபி, கட்லா, ரோகு, புல்லுக்கெண்டை, பாறை உள்ளிட்ட பல்வேறு வகை மீன்கள் பொதுமக்கள் வலையில் சிக்கின. இதையடுத்து பிடிபட்ட மீன்களை பொதுமக்கள் தங்களது வீடுகளில் சமைத்து சாப்பிட்டனர். அக்கம்பக்கத்தினருக்கு வழங்கியும் மகிழ்ந்தனர்.


Related Tags :
Next Story