திருமாணிக்கம்பட்டியில் மீன்பிடி திருவிழா
திருமாணிக்கம்பட்டியில் மீன்பிடி திருவிழா நடந்தது.
கரூர்
தோகைமலை
தோகைமலை ஊராட்சிக்கு உட்பட்ட திருமாணிக்கம்பட்டியில் உள்ள குளத்தில் 20 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று மீன்பிடி திருவிழா நடந்தது. இதனை ஊர் நாட்டாமை ரத்தினம் வெள்ளை துண்டை வீசி தொடங்கி வைத்தார். இதையடுத்து பொதுமக்கள் குளத்துக்குள் இறங்கி கொசுவலை, தூர், கடச்சா போன்ற உபகரணங்களை பயன்படுத்தி குறவை, விரால் உட்பட பல்வேறு மீன்கள் மகிழ்ச்சியுடன் பிடித்து சென்றனர். இதில், தோகைமலை, பாதிரிப்பட்டி, பில்லூர், தெலுங்கு பட்டி, கீழவெளியூர், கல்லடை, ஆலத்தூர் உள்பட பல்வேறு ஊர்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story