ஏரியில் மீன்பிடி திருவிழா
தொரவளூர் ஏரியில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.
கடலூர்
விருத்தாசலம்,
விருத்தாசலம் அடுத்த தொரவளூரில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. இந்த ஏரியில் நேற்று மீன்பிடி திருவிழா நடைபெற்றது. விழாவில் தொரவளூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கோமங்கலம், பரவலூர், சாத்தியம், க.இளமங்கலம், சாத்துக்கூடல், முகுந்தநல்லூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ஏரியில் இறங்கி வலை, மீன்பிடிக்கும் கூடை மற்றும் கைகளால் போட்டி போட்டு மீன்பிடித்தனர். இதில் கெளுத்தி, கெண்டை, விரால், குரவை உள்ளிட்ட வகை மீன்கள் அதிக அளவில் சிக்கின. ஒவ்வொருவருக்கும் சுமார் 8 கிலோ வரை மீன்கள் கிடைத்தன. இதனால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் மீன்களுடன் தங்களது வீட்டுக்கு திரும்பிச்சென்றனர். இந்த மீன்பிடி திருவிழாவால் நேற்று தொரவளூர் ஏரி பரபரப்பாக காணப்பட்டது.
Related Tags :
Next Story