வாடிப்பட்டி அருகே மீன்பிடி திருவிழா
வாடிப்பட்டி அருகே மீன்பிடி திருவிழா நடைபெற்றது
மதுரை
வாடிப்பட்டி,
வாடிப்பட்டி அருகே குலசேகரன்பட்டி சாலையில் பொன்மலை பின்புறத்தில் பொன்பெருமாள் கண்மாய் 55 ஏக்கர் அளவில் உள்ளது. சிறுமலை பகுதியில் பெய்யும் மழையால் பல ஓடைகள் வழியாக இந்த கண்மாய்க்கு தண்ணீர் வந்து சேரும். தற்போது கண்மாயில் தண்ணீர் முழுவதும் வற்றி வருகிறது. இதனால் கண்மாயில் கிராம பொதுமக்கள் சார்பாக மீன்பிடி திருவிழா நடந்தது. நேற்று காலை 5 மணி முதல் பொதுமக்கள் கூட்டமாக வந்து கைகளில் சிக்கிய மீன்களை பிடித்தனர். இதில் ஒரே ஒருவர் மட்டும் வீசிய வலையில் 40 கிலோ எடையுள்ள மீன்கள் சிக்கியது. அதை எடுத்துக் கொண்டு அவர் ஆனந்தமாக சென்றார். இதனால் இந்த பகுதியில் உள்ள வீடுகளில் மீன் குழம்பு வாசம் கமகமத்தது.
Related Tags :
Next Story