ரூ.26 ¼ கோடியில் மீன்பிடி துறைமுகம் மேம்படுத்தும் பணி


ரூ.26 ¼ கோடியில் மீன்பிடி துறைமுகம் மேம்படுத்தும் பணி
x
தினத்தந்தி 31 May 2023 12:15 AM IST (Updated: 31 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பழையாறில் ரூ.26 ¼ கோடியில் மீன்பிடி துறைமுகம் மேம்படுத்தும் பணியை மாவட்ட கலெக்டர் மகாபாரதி ஆய்வு செய்தார்.

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

பழையாறில் ரூ.26 ¼ கோடியில் மீன்பிடி துறைமுகம் மேம்படுத்தும் பணியை மாவட்ட கலெக்டர் மகாபாரதி ஆய்வு செய்தார்.

மேம்படுத்தும் பணி

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையாறு இயற்கை மீன்பிடி துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்தில் படகுகளை பாதுகாப்பான முறையில் நிறுத்தி வைக்க, மீன்களை சுகாதாரமான முறையில் கையாளுவதற்கும், கூடுதல் படகு அணையும் தளம், தடுப்புசுவர், மீன் ஏலக்கூடம், மீன் விற்பனை நிலையம், பணிக்கட்டி உற்பத்தி நிலையம், மீன் பதப்படுத்தும் மையம் குடிநீர் வசதிகள்,சா லை மற்றும் வடிகால் வசதிகள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளுடன் ரூ.26 கோடியே 26 லட்சம் செலவில் மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது .

இந்தப் பணிகளை மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணியினை உரிய காலத்தில் தரத்துடன் முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும் மீனவர்களிடம் குறைகளை கேட்டு அறிந்து பணியினை செம்மைப்படுத்திட உத்தரவிட்டார். தொடர்ந்து மீனவர்களை சந்தித்து அவர்களது அடிப்படை தேவைகளை கேட்டு அறிந்தார். அப்போது மீனவர்கள் தரப்பில் பழைய மீனவ கிராமத்தில் அடிப்படை தேவையான குடிநீர் சாலை மின்விளக்கு மற்றும் குடியிருப்பு வாசிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

சால்வை அணிவிப்பு

அதனை மாவட்ட கலெக்டர் மகாபாரதி துறை சார்ந்த அதிகாரியிடம் தெரிவித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். தொடர்ந்து பழையாறில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு பணியினை பாராட்டி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது ஊரக வளர்ச்சித்துறை இணை இயக்குனர் ஸ்ரீலேகா தமிழ்செல்வன்,கொள்ளிடம் ஒன்றிய குழு தலைவர் ஜெயபிரகாஷ், மீன்வள உதவி இயக்குனர் ராஜேஷ்குமார்,உதவி இயக்குனர் ஊராட்சிகள் மஞ்சுளா, உதவி இயக்குனர் தணிக்கை கோவிந்தராஜ், மீன்வளத்துறை உதவி செயற்பொறியாளர் ரவீந்திரன், சீர்காழி தாசில்தார் செந்தில்குமார், கொள்ளிடம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அருள்மொழி,ரெஜினாராணி, ஊராட்சி மன்ற தலைவர் மூர்த்தி, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் அங்குதன், மஞ்சுளா தேவி ரமேஷ், கிராம தலைவர் செல்வமணி, மீனவர் சங்க பிரதிநிதிகள், மீனவர்கள் உடன் இருந்தனர்.


Next Story