மீன் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை
ஆரல்வாய்மொழியில் மீன் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொணடார்.
ஆரல்வாய்மொழி:
ஆரல்வாய்மொழியில் மீன் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொணடார்.
ஆரல்வாய்மொழி வடக்கூர் அரசு மருத்துவமனை பகுதியை சேர்ந்தவர் வர்க்கீஸ் (வயது 48), மீன் வியாபாரி. இவருடைய முதல் மனைவி லிசா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் கருத்து வேறுபாட்டால் லிசி மட்டும் பிரிந்து சென்று விட்டாள். வர்க்கீஸின் 2-வது மனைவி வடிவு. இவர்களுக்கு 1 மகள் உள்ளனர். வடிவு அம்பலவாணபுரத்தில் உள்ள ஒரு பேக்கரியில் வேலை செய்து வருகிறார்.
இந்தநிலையில் வர்க்கீஸ் ஒரு மாதமாக வியாபாரத்திற்கு செல்லவில்லை என கூறப்படுகிறது. மேலும் அவருக்கு பணமும் தேவைப்பட்டது. இவர் நேற்று வீட்டில் தனியாக இருந்தார். மாலையில் பள்ளிக்கூடம் முடிந்து வீட்டுக்கு வந்த இளையமகள் கதவை தட்டியுள்ளார். ஆனால் கதவை வர்க்கீஸ் திறக்கவில்லை. இதனால் அவர் ஜன்னல் வழியாக எட்டி பார்த்த போது வர்க்கீஸ் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உறவினர்கள் கதவை உடைத்தபடி உள்ளே சென்று உடலை கீழே இறக்கினர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆரல்வாய்மொழி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரான்சிஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வர்க்கீஸின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம்? குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.