அரசு உயர்நிலைப்பள்ளியில் ஐம்பெரும் விழா


அரசு உயர்நிலைப்பள்ளியில் ஐம்பெரும் விழா
x
தினத்தந்தி 14 Jun 2023 12:15 AM IST (Updated: 14 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நாலுவேதபதி மூக்காச்சித்தெரு அரசு உயர்நிலைப்பள்ளியில் ஐம்பெரும் விழா

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யம் அருகே நாலுவேதபதி ஊராட்சி மூக்காச்சித் தெரு அரசு உயா்நிலைப்பள்ளியில் பணி நிறைவு பாராட்டு விழா, அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா, சிறப்பாக செயல்பட்ட ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா உள்ளிட்ட ஐம்பெரும் விழா நடந்தது. விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தரேசன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் ஞானசுந்தரி, ஒன்றிய கவுன்சிலர் உதயகுமார், தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற மாநில துணை செயலாளர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓய்வு பெற்ற விடுதி காப்பாளர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார். பணி நிறைவு பெறும் தலைமையாசிரியர் அருள்செல்வன், தமிழாசிரியர் கலைமகள் ஆகியோருக்கு நினைவு பரிசு அளிக்கப்பட்டது. மேலும் மாநில, மாவட்ட அளவில் சிறப்பு மதிப்பெண்கள் பெற்ற சுஜிதா, மீனாப்பிரியா, தீபிகா, காவியா, ஜெயராம் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. விழாவில் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சண்முகராஜ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கனகராஜ், சமூக ஆர்வலர் சுந்தரபாண்டியன், ஆசிரியர்கள் செல்வகுமார், பள்ளி வளர்ச்சிக்குழு தலைவர் மணிவண்ணன், பொருளாளர் மணி, செயலாளர் கருணாநிதி மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர். முடிவில் ஆசிரியர் ஸ்டாலின் நன்றி கூறினார்.


Next Story