திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் ஐவர் கால்பந்து போட்டி


திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் ஐவர் கால்பந்து போட்டி
x

திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் ஐவர் கால்பந்து போட்டி நடைபெற்றது.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழகம், செவன் டாலர்ஸ் கால்பந்து குழு மற்றும் மேட்டுப்பட்டி ஊர்பொதுமக்கள் சார்பில் மாநில அளவிலான ஐவர் கால்பந்து, மேட்டுப்பட்டி புனித வியாகுல அன்னை ஆலயம் அருகே நடந்தது. இப்போட்டியில் திண்டுக்கல், தேனி, கரூர், மதுரை, திருப்பூர் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 52 அணிகள் பங்கேற்றன.

போட்டிகள் வயது அடிப்படையில் 10, 14 மற்றும் ஓபன் ஆகிய 3 பிரிவுகளாக நாக் அவுட் முறையியல் நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு நடந்த 10 வயதுகுட்பட்டோருக்கான இறுதிப்போட்டியில், திண்டுக்கல் மேட்டுப்பட்டி செவன் டாலர்ஸ் அணியை வீழ்த்தி ஹச்.எப்.ஏ. கால்பந்து குழு அணி சாம்பியன் பட்டம் வென்றது. 14 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் மேட்டுப்பட்டி ஏ அணி வெற்றிபெற்றது. பின்னர் ஓபன் பிரிவில் நடந்த போட்டியில், செவன் டாலர்ஸ் அணி வெற்றிபெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

இதையடுத்து முதலிடம் பெற்ற அணிகளுக்கு ரூ.20 ஆயிரம் மற்றும் பரிசுக்கோப்பை வழங்கப்பட்டது. இதனை திண்டுக்கல் மாவட்ட ஆக்கி சங்க தலைவர் நாட்டாண்மை காஜாமைதீன் வழங்கினார். இதில் மாவட்ட மல்யுத்த சங்க தலைவர் கார்த்திகேயன், தொழில் அதிபர்கள் தாமஸ்பீட்டர், தமிழ்வாணன், வன்னிய கிறிஸ்தவ கூட்டமைப்பு தலைவர் மரியராஜ், கவுன்சிலர் தெரசாமேரி, முகிழம் அகாடமி நிர்வாக இயக்குனர் ராஜேஸ்வரி சுரேஷ், பட்டேல் ஆக்கி சங்க செயலாளர் ஞானகுரு உள்பட பலர் கலந்துகொண்டனர்.



Next Story