5 டிராக்டர்கள்-பொக்லின் எந்திரம் பறிமுதல்
திருத்துறைப்பூண்டி அருகே அனுமதியின்றி மண் அள்ளிய 5 டிராக்டர்கள் மற்றும் ஒரு பொக்லின் எந்திரத்தை பறிமுதல் செய்த போலீசார் 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருத்துறைப்பூண்டி,
திருத்துறைப்பூண்டி அருகே அனுமதியின்றி மண் அள்ளிய 5 டிராக்டர்கள் மற்றும் ஒரு பொக்லின் எந்திரத்தை பறிமுதல் செய்த போலீசார் 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தூர்வாரும் பணி
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மருதவனம் ஊராட்சியில் கருங்குளம் உள்ளது. இந்த குளம் தூர்வாரும் பணி நடைபெற்றது. அப்பொழுது குளத்தில் தூர் வாரும் மண் கரை கட்டுவதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் குளத்தில் தூர்வாரி அள்ளப்படும் மண் வேறு பகுதிக்கு சென்று விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதன் பேரில்மருதவனம் கிராம நிர்வாக அலுவலர் பிரதாப், திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
4 பேர் கைது
இதன்பேரில் போலீசார் மற்றும் திருத்துறைப்பூண்டி தாசில்தார் காரல்மார்க்ஸ், உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அனுமதியின்றி மண் அள்ளிய 5 டிராக்டர்கள் மற்றும் ஒரு பொக்லின் எந்திரத்தை பறிமுதல் செய்தனர். மேலும் அந்த பகுதியை சேர்ந்த டிராக்டர் டிரைவர்களான ராஜா (வயது35), வெங்கடேஷ்பிரசாத் (23), டேவிட்(24), பாரதிராஜா (35) ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.