கட்டுமான பணியில் ஈடுபடும் பெண்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்ய வேண்டும்-சங்க கூட்டத்தில் தீர்மானம்


கட்டுமான பணியில் ஈடுபடும் பெண்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்ய வேண்டும்-சங்க கூட்டத்தில் தீர்மானம்
x

கட்டுமான பணியில் ஈடுபடும் பெண்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தர்மபுரி

தமிழ்நாடு கட்டிட தொழிலாளர் சங்கத்தின் மாவட்டபொதுக்குழு கூட்டம் தர்மபுரியில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் குழந்தைவேல் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் முனுசாமி, மாவட்ட செயலாளர் சுதர்சனன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் கலைச்செல்வன், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட தலைவர் மாதேஸ்வரன், மாவட்ட பொதுச்செயலாளர் மணி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

நல வாரியத்தில் ஓய்வூதியம் பெற்று வரும் கட்டுமான தொழிலாளர்களுக்கு முறையாக ஓய்வூதியம் வழங்க வேண்டும். தொழிலாளர் நல வாரியத்தில் மாவட்ட அளவில் கண்காணிப்புக்குழு அமைக்க வேண்டும். கட்டுமான தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் வழங்க வேண்டும். கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி செலவு முழுவதையும் நல வாரியம் ஏற்க வேண்டும். வீடற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு வீட்டுமனை வழங்கி வீடு கட்டி கொடுக்க வேண்டும். பெண் கட்டுமான தொழிலாளர்களுக்கு 50 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும். திருமண உதவித்தொகை, மாணவர்களின் கல்வி உதவி தொகை உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை நேரடியாக பெற வேண்டும். கட்டுமான பணியில் ஈடுபடும் பெண்களுக்கு சட்டப்படியான குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் விஜயா, மாவட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


Next Story