விநாயகர் சதுர்த்தி விழா முன்னிட்டுதேன்கனிக்கோட்டையில் போலீசார் கொடி அணிவகுப்பு


விநாயகர் சதுர்த்தி விழா முன்னிட்டுதேன்கனிக்கோட்டையில் போலீசார் கொடி அணிவகுப்பு
x
கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை

தேன்கனிக்கோட்டை தாலுகாவில் நாளை (திங்கட்கிழமை) விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி விநாயகர் சிலைகளை வருகிற 21-ந் தேதி நீர்நிலைகளில் கரைக்க உள்ளனர். அதேபோல் மதகொண்டப்பள்ளியில் 22 -ந் தேதி விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகின்றன. இதையொட்டி தேன்கனிக்கோட்டை மற்றும் மதகொண்டப்பள்ளியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன் தலைமையில் துணை கண்காணிப்பாளர் முரளி மற்றும் இன்ஸ்பெக்டர் நாகராஜ் உள்பட 100-க்்கும் மேற்பட்ட போலீசார் நேற்று கொடி அணிவகுப்பு நடத்தினர். தேன்கனிக்கோட்டை பஸ் நிைலயத்தில் தொடங்கிய அணிவகுப்பு எம்.ஜி. ரோடு, நேதாஜி ரோடு, கோட்டை வாசல் வழியாக சென்றது.


Next Story