புனித அருளானந்தர் ஆலய திருவிழா கொடியேற்றம்


புனித அருளானந்தர் ஆலய திருவிழா கொடியேற்றம்
x
தினத்தந்தி 29 Jan 2023 12:15 AM IST (Updated: 29 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

காளையார்கோவில் புனித அருளானந்தர் ஆலய திருவிழா கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சிவகங்கை

காளையார்கோவில்

காளையார்கோவில் புனித அருளானந்தர் ஆலய திருவிழா கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. குருமட ஆன்மிக ஆலோசகர் அருட்தந்தை தாமஸ் கொடியை ஏற்றி வைத்தார். அருட்தந்தை சேவியர் தலைமையில் அருட்தந்தையர்கள் மரியராஜ், அகஸ்டின், ஆல்பர்ட் அந்தோணி, சச்சின் ஆகியோர் இணைந்து கூட்டு திருப்பலி நிறைவேற்றினர்.

விழாவையொட்டி நாள்தோறும் மாலை நவநாள் திருப்பலி நடைபெறும். மேலும், திருவிழா திருப்பலியும் அதனை தொடர்ந்து சப்பர பவனியும் நடைபெற உள்ளது. பின்னர் திருப்பலி மற்றும் கொடி இறக்கும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை சூசை ஆரோக்கியம், உதவி பங்கு தந்தை சூசை ராஜ் உள்பட கிராம மக்கள் செய்திருந்தனர். இந்த கொடியேற்றும் நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story