கொடிக்கம்பம் சேதம்; வி.சி.க.வினர் சாலை மறியல்
திண்டிவனம் அருகே கொடிக்கம்பம் சேதப்படுத்தப்பட்டதால் வி.சி.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
விழுப்புரம்
பிரம்மதேசம்;
திண்டிவனம் அருகே அருவப்பாக்கம், தென்கோடிப்பாக்கத்தில் நேற்று முன்தினம் இரவு வி.சி.க.வின் கொடிக்கம்பத்தை மர்மநபர்கள் சேதப்படுத்தினர். இதை கண்டித்தும், மர்மநபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் இரணியன், வானூர் தொகுதி துணை செயலாளர் அன்பரசு, கிளியனூர் ஒன்றிய செயலாளர்கள் மணிமாறன், ஈழத்தமிழன் மற்றும் பலர் திண்டிவனம்-புதுவை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்ததும் கிளியனூர் போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார், விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story