குற்றாலம் அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு


குற்றாலம் அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு
x

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த சாரல் மழையால் குற்றாலம் அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

தென்காசி

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த சாரல் மழையால் குற்றாலம் அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

குற்றாலம்

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. நேற்று சாரல் மழை விட்டு விட்டு தூறியது.

மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலி அருவி, சிற்றருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது.

திடீர் வெள்ளப்பெருக்கு

இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் சாரல் மழை தொடர்ந்து பெய்ததால் நேற்று மாலை திடீரென மெயின் அருவி, ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் மெயின் அருவியில் ஓரமாக நின்று சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் அனுமதித்தனர். ஆனால் அருவியின் மையப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல போலீசார் தடை விதித்தனர். ஐந்தருவியில் நேற்று இரவு முழுவதும் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது.



Next Story