மோசமான வானிலையால் திருச்சியில் தரையிறங்கிய விமானம்


மோசமான வானிலையால் திருச்சியில் தரையிறங்கிய விமானம்
x

மோசமான வானிலையால் திருச்சியில் விமானம் தரையிறக்கப்பட்டது.

திருச்சி

செம்பட்டு:

சென்னையில் இருந்து தினமும் மாலை 4.35 மணிக்கு இண்டிகோ விமானம் புறப்பட்டு மாலை 6 மணிக்கு மதுரை விமான நிலையத்தை சென்றடையும். இந்த விமானம் நேற்று 78 பயணிகளுடன் மாலை 4.35 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டது. மாலை 5.35 மணி அளவில் திருச்சி விமான நிலையத்தை அந்த விமானம் நெருங்கியது. அப்போது, மதுரை விமான நிலையத்தில் மோசமான வானிலை இருந்தது குறித்து விமானிக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த விமானம் திருச்சி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. பின்னர் மதுரையில் வானிலை சீரடைந்ததை தொடர்ந்து, இரவு 7.30 மணியளவில் திருச்சியில் இருந்து அந்த விமானம் புறப்பட்டு மதுரை நோக்கி சென்றது. இந்த சம்பவத்தால் விமானத்தில் இருந்த 78 பயணிகளும் பெரும் அவதியை சந்திக்கும் நிலை ஏற்பட்டது.


Next Story