தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு


தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு
x

இருமத்தூர் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தர்மபுரி

மொரப்பூர்:

இருமத்தூர் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தண்ணீர் திறப்பு

தென்பெண்ணை ஆறு கர்நாடக மாநிலத்தில் உருவாகி கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் வழியாக கடலில் கலக்கிறது. தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ஓசூர் கெலவரப்பள்ளி அணை, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை மற்றும் திருவண்ணாமலை சாத்தனூர் அணைகளும், தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே கே.ஈச்சம்பாடி அணையும், இருமத்தூரில் தடுப்பணையும் கட்டப்பட்டுள்ளன.

கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஓசூர் கெலவரப்பள்ளி, கே.ஆர்.பி. அணைகள் நிரம்பின. இதனால் கே.ஆர்.பி. அணையில் இருந்து வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கே.ஈச்சம்பாடி அணை நிரம்பியது.

வெள்ளப்பெருக்கு

இதன் காரணமாக இருமத்தூர் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கம்பைநல்லூர், கொங்கரப்பட்டி, கெலவள்ளி, கே.ஈச்சம்பாடி, சாமாண்டஅள்ளி எம்.வெளாம்பட்டி, தாமலேரிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை பொதுமக்கள் பார்த்து வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், பல ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தற்போது மீண்டும் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த தண்ணீரை அருகாமையில் உள்ள கிராம ஏரிகளுக்கு கொண்டு செல்ல தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.


Next Story