வெள்ள பாதிப்பு ஒத்திகை
சிவகங்கை மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு ஏற்படும் சமயத்தில் மக்கள் தங்களை பாதுகாத்து கொள்வது குறித்த பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி 5 இடங்களில் நடக்கிறது.
சிவகங்கை மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு ஏற்படும் சமயத்தில் மக்கள் தங்களை பாதுகாத்து கொள்வது குறித்த பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி 5 இடங்களில் நடக்கிறது.
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூன்ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
பாதுகாப்பு ஒத்திகை
சிவகங்கை மாவட்டத்தில் மழை வெள்ளத்தினால் பாதிப்பு ஏற்படும் போது அதில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ளும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்திட பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி 5 இடங்களில் நடத்தப்பட உள்ளது. அதன் அடிப்படையில் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 1.30 மணி வரை மானாமதுரை வட்டத்திற்குட்பட்ட கள்ளர்வலசை கிராமத்தில் சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலும், இளையான்குடி வட்டத்திற்குட்பட்ட தாயமங்கலம் அகதிகள் முகாமில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் தலைமையிலும், திருப்புவனம் வட்டத்திற்குட்பட்ட சொக்கநாதயிருப்பு ஆதிதிராவிடர் காலனியில் சமூகப்பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் தலைமையிலும், தேவகோட்டை வட்டத்திற்குட்பட்ட நல்லாங்குடி நரிக்குறவர் குடியிருப்பில் தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலும் நடைபெற உள்ளது.
தெரிந்து கொள்ள வேண்டும்
அதேபோல சிங்கம்புணரி வட்டத்திற்குட்பட்ட என்.மாம்பட்டி கிராமம், அம்மன் நகரில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தலைமையிலும் நடைபெறவுள்ளது.
எனவே இந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெள்ளபாதிப்பு ஏற்படும் சமயத்தில ்எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது என்பது குறித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.