வெள்ளம் பாதித்த பகுதிகளை ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. ஆய்வு
கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
அய்யம்பேட்டை;
அய்யம்பேட்டை அருகே கொள்ளிடம் ஆற்றின் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.ஆய்வு செய்தார். கொள்ளிடம் ஆறு, வெள்ள தடுப்பு கரை, மதகுகளை பார்வையிட்ட அவர் நிருபர்களிடம் கூறியதாவதுகொள்ளிடம் ஆற்றின் கரையோர பகுதிகளில் நிரந்தர கட்டமைப்பை ஏற்படுத்த தமிழக அரசுக்கு எடுத்து கூறுவோம். இந்த பகுதியில் வெள்ள காலங்களில் மீட்பு நடவடிக்கைகளுக்காக எந்திர படகு வாங்கி தர தமிழக அரசிடம் வலியுறுத்துவோம். கொள்ளிடம் ஆற்றில் குடிக்காடு - ராமநல்லூர் பால பணிகளை விரைவாக தொடங்கவும், கணபதி அக்ரகாரம் -அய்யம்பேட்டை சாலையில் குடமுருட்டி ஆற்றில் கட்டப்பட்டு வரும் பால பணிகளை விரைந்து முடிக்கவும் அதிகாரிகளிடம் வலியுறுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார். அப்போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அய்யம்பெருமாள், மாவட்ட கவுன்சிலர் தாமரைச்செல்வன், ஒன்றியக்குழுதலைவர் சுமதி கண்ணதாசன், தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர் அய்யாராசு, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்ரமணியன், ஊராட்சி தலைவர் ஜெய்சங்கர் உள்பட பலர் இருந்தனர்.