வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் படகுகள் மூலம் மீட்பு
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர்
மயிலாடுதுறை
கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர கிராமங்களான நாதல்படுகை, முதலைமேடு திட்டு, வெள்ளைமணல், கோரை திட்டு, பாலூரான்படுகை, வாடி ஆகிய 6 கிராமங்களை வெள்ளநீர் சூழ்ந்தது. இந்த கிராமங்களில் உள்ள சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் அங்குள்ள பொதுமக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு கரையோரம் உள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்பட அனைத்து அடிப்படை வசதிகளும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக வருவாய்த்துறையினர், ஊரக வளர்ச்சி துறையினர் செய்து கொடுத்து வருகின்றனர். மேலும் அங்குள்ள கிராமங்களில் உள்ள கால்நடைகள் மீட்கப்பட்டு ஆற்றின் கரையோரம் கட்டி வைக்கப்பட்டுள்ளன.
Related Tags :
Next Story