காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு - 47 வீடுகளை சூழ்ந்துள்ள வெள்ளநீர்
மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால், காவிரி கரையோர பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
நாமக்கல்,
மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால், காவிரி கரையோர பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில், காவிரி கரையோர பகுதிகளில் உள்ள 47 வீடுகளில் வெள்ளநீர் சூழ்ந்தது.
இதனால் உடனடியாக நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், தீயணைப்புத் துறையினர் குடியிருப்புகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட 47 குடும்பத்தினரும், சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டு, அடிப்படை வசதிகளை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story