தடுப்பணையில் ெபருக்கெடுத்து ஓடும் வெள்ளம்


தடுப்பணையில் ெபருக்கெடுத்து ஓடும் வெள்ளம்
x

ஆவணியாபுரம் செய்யாற்றின் குறுக்கே தடுப்பணையில் ெபருக்கெடுத்து வெள்ளம் ஓடுகிறது.

திருவண்ணாமலை

சேத்துப்பட்டு

சேத்துப்பட்டு தாலுகா ஆவணியாபுரம் அருகே செய்யாற்றின் குறுக்கே தடுப்பணை உள்ளது. கடந்த சில நாட்களாக ஜவ்வாதுமலை பகுதியில் மழை பெய்ததால் அங்கு இருந்து மழை வெள்ளம் செய்யாறு ஆற்றுப்படுகை வழியாக ஆவணியாபுரம் தடுப்பணைக்கு வந்து சேர்ந்தது.

இந்த தடுப்பணையில் 15 கண்கள் உள்ளன. அதில் 5 கண்கள் மட்டும் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மேலும் பக்க கால்வாய் மூலமாகவும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இதிலிருந்து வெளியேறும் தண்ணீர் மூலம் கொருக்காத்தூர், கடுகனூர், சித்தேரி, தொழுபேடு, எறையூர், வள்ளுவன் தாங்கள்ஏரி, தவசி, காணிப்பாக்கம், நாவல், செங்காடு, நல்லாலம், ஆயிலவாடி, கோவிலூர் உள்பட 15 ஏரிகள் நிரம்பியுள்ளன.

மேற்கண்ட தகவலை செய்யாறு இளநிலை பொறியாளர் (பாசனதிட்டம்) பரந்தாமன் தெரிவித்துள்ளார்.


Next Story