கூத்தாநல்லூர் அருகே வடபாதியில் தரைப்பாலம் கட்டப்பட்டது


கூத்தாநல்லூர் அருகே வடபாதியில் தரைப்பாலம் கட்டப்பட்டது
x
தினத்தந்தி 13 Jun 2022 6:15 PM IST (Updated: 13 Jun 2022 6:15 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக கூத்தாநல்லூர் அருகே வடபாதியில் தரைப்பாலம் கட்டப்பட்டது.

திருவாரூர்

கூத்தாநல்லூர்:-

'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக கூத்தாநல்லூர் அருகே வடபாதியில் தரைப்பாலம் கட்டப்பட்டது.

தரைப்பாலம் சேதம்

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே வடபாதிமங்கலத்தில் இருந்து மூலங்குடி வழியாக திருவாரூர் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை திருவாரூர், மன்னார்குடி, கூத்தாநல்லூர், நாகை போன்ற நகர பகுதிகளை இணைக்கும் முக்கிய வழித்தடத்தில் அமைந்துள்ளது.

இதனால், இந்த சாலை போக்குவரத்து மிகுந்த சாலையாக இருந்து வருகிறது. இந்த சாலையில் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் வடபாதி என்ற இடத்தில் சாலையின் குறுக்கே இருந்த பனையனார் வடிகால் வாய்க்கால் தரைப்பாலம் சேதம் அடைந்து காணப்பட்டது.

'தினத்தந்தி' செய்தி எதிரொலி

இடிந்து விழும் நிலையில் பாலம் இருந்ததால், பொதுமக்கள் அச்சத்தில் இருந்தனர். சேதம் அடைந்த பாலத்ைத அகற்றிவிட்டு அதே இடத்தில் புதிதாக தரைப்பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இது குறித்து 'தினத்தந்தி' நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பாலத்தை அகற்றிவிட்டு அதே இடத்தில் புதிதாக தரைப்பாலம் கட்டி உள்ளனர். இதையடுத்து செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும், பாலம் கட்டித்தர நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.


Next Story