போலீஸ்காரரை தாக்கிய பூ வியாபாரி கைது


போலீஸ்காரரை தாக்கிய பூ வியாபாரி கைது
x

போலீஸ்காரரை தாக்கிய பூ வியாபாரி கைது செய்யப்பட்டார்.

திருச்சி

சமயபுரம்:

மதுரை மாவட்டம் திருமங்கலம் வடக்கு தெருவை சேர்ந்தவர் தனுஷ்கோடி. இவரது மகன் பாரதி(வயது 25). இவர் விராலிமலை போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். இவரும், இனாம்குளத்தூர் போலீஸ் நிலையத்தில் போலீசாக வேலை பார்த்து வரும் இவரது மனைவி பாண்டிச்செல்வியும்(23) நேற்று சமயபுரம் மாரியம்மனை தரிசனம் செய்வதற்காக சமயபுரத்திற்கு காரில் வந்தனர். காரை அப்பகுதியில் நிறுத்திவிட்டு கோவிலுக்கு சென்றபோது அங்கே பூக்கடை வைத்திருக்கும் சமயபுரம் அருகே உள்ள ஈஞ்சூர் அரிசன தெருவை சேர்ந்த பாலையாவின் மகன் சுதாகர்(39) என்பவர் பாரதியிடம் செருப்பை இங்கே விட்டுச்செல்லுங்கள் என்று கூறி, அதைத்தொடர்ந்து மாலை வாங்கி செல்லுமாறு கூறியுள்ளார்.

அதற்கு பாரதி மாலை வேண்டாம் என்று கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் சுதாகர், பாரதியை தாக்கி சட்டையை கிழித்ததாகவும், இதைத்தொடர்ந்து பாரதியும், சுதாகரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து பாரதி அளித்த புகாரின்பேரில் சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுதாகரை கைது செய்தனர்.


Next Story