அரங்குளநாதர் கோவிலில் பூச்சொரிதல் விழா


அரங்குளநாதர் கோவிலில் பூச்சொரிதல் விழா
x

அரங்குளநாதர் கோவிலில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை

திருவரங்குளத்தில் பெரியநாயகி அம்பாள் சமேத அரங்குளநாதர் கோவில் உள்ளது. இ்க்கோவிலில் வைகாசி திருவிழாவையொட்டி பூச்சொரிதல் விழா நடைபெற்றது. முன்னதாக பெரியநாயகி அம்மனுக்கு, மஞ்சள், பால், தயிர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 9 வகையான அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஓம் சக்தி மகளிர்கள், கிட்டக்காடு, வல்லநாட்டு செட்டியார்கள், பூவரசங்குடி, இடையன் வயல், கே. வி.எஸ். நகர் மெயின் ரோடு, அழகப்பா நகர், பெரியநாயகபுரம், கோவில்பட்டி, தோப்பு கொல்லை, தேத்தாம்பட்டி, பாரதியார் நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் அலங்கரிக்கப்பட்ட ரதங்களில் பூக்களை மேளதாளம், வாணவேடிக்கையுடன் தேரோடும் நான்கு வீதிகள் வழியாக கோவிலுக்கு எடுத்து வந்தனர். பின்னர் அம்மனுக்கு பூக்களை சாற்றி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story