மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா


மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா
x
தினத்தந்தி 27 March 2023 12:15 AM IST (Updated: 27 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பொறையாறு அருகே ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா நடந்தது.

மயிலாடுதுறை

பொறையாறு:

பொறையாறு அருகே ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா நடந்தது.

மாரியம்மன் கோவில்

மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு அருகே ஒழுகைமங்கலம் கிராமத்தில் சீதளாபரமேஸ்வரி எனும் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சோழ நாட்டு சக்தி பீடங்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்த திருக்கோவிலில் பரிவார தெய்வங்களாக அய்யனார் பிடாரி அம்மன் சன்னதிகளும் அமைந்துள்ளன.

இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் பங்குனி பெருந்திருவிழா நடைபெறும். அப்போது பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் பால்குட காவடி, அலகு காவடி,பாடை காவடி, எடுத்து வந்து தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றி செல்வது வழக்கம்

பூச்சொரிதல் விழா

இத்தகைய பிரசித்தி பெற்ற கோவிலில் நேற்று காலை சீதளா பரமேஸ்வரி அம்மன் எழுந்தருளி மங்கள வாத்தியங்கள் முழங்க வீதி உலா காட்சி நடைப்பெற்றது. அப்போது பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் வேண்டுதல் நிறைவேற்றும் வகையில் பல்வேறு வண்ண மலர்களை எடுத்து வீதி உலாவில் சென்றனர். அதனை தொடர்ந்து அம்மனுக்கு மஞ்சள்பொடி, பால்,தேன்,சந்தனம், இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு பக்தர்கள் கொண்டு வந்த பல்வேறு வண்ண மலர்கள் மூலம் பூச்சொரிதல் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story